குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்தார் பிரதமர் மோடி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இத்தேர்தலில் பிரதமர் மோடி அகமதாபாத்தின் ராணிப் பகுதியில் உள்ள நிஷான் பப்ளிக் பள்ளிக்குச் சென்று தனது வாக்கினை செலுத்தினார்.
இதற்காக, காந்திநகர் ராஜ்பவனில் இருந்து பிரதமர் மோடி நடந்துச் சென்ற போது வழிநெடுகிலும் நின்று பொதுமக்கள் அவரை வரவேற்றனர்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர், குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலை, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மிகச் சிறப்பாக நடத்தி வருவதாக பாராட்டுத் தெரிவித்ததோடு, ஆர்வமுடன் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் பாராட்டுதலையும் தெரிவித்தார்.
Comments