ஓடும் மின்சார ரயிலில் தொங்கியபடியும், அதன் மீது ஏறியும் இளைஞர்கள் விபரீத பயணம்..!
சென்னையில், ஓடும் மின்சார ரயிலின் வெளிப்புறம் தொங்கியபடியும், அதன் மீது ஏறியும் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புறநகர் செல்லும் ரயில்களில், ஏறும் இளைஞர்கள் சிலர் சமூக வலைதளங்களில் அதிக லைக்குகள் பெறவேண்டும் என்பதற்காக பிளாட்பாரங்களில் கால்களை உரசியபடியே சென்று, ஆபத்தான பயணம் மேற்கொண்டு அதனை வீடியோவாக பதிவேற்றி உள்ளனர்.
ஐ எம் சி.பிரவீன் என்ற இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இதுபோன்ற விபரீத வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு உள்ளன.
Comments