மதுபோதையில் காரை ஓட்டிச் சென்று இருசக்கர வாகனத்தின் மீது மோதிய இளம்பெண்.. குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்

0 1892

கேரளாவில் மது போதையில் இளம்பெண் ஓட்டிச் சென்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் குழந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கண்ணூர் அருகே மாகி பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீசார் விசாரணையில் மதுபோதையில் வந்த பெண் வடக்கும்பாட்டைச் சேர்ந்த ரசீனா என்பது தெரிய வந்தது.

மேலும் அந்த பெண் அங்கு திரண்டிருந்த மக்களிடையே தகராறிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இளம்பெண்ணை கைது செய்த போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். அவர் ஓட்டிச் சென்ற காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments