திடீரென பழுதான கணினி சர்வர்... சோதனைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த விமானப் பயணிகள்..!

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கணினி பழுது காரணமாக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பெரும்பாலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் இரண்டாவது முனையத்தில் கையாளப்படுகின்றன. இங்குள்ள கணினி சர்வர் திடீரென பழுதானதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அவர்களின் உடைமைகளை சோதிப்பது உள்ளிட்ட பணிகளை கணினி இல்லாமல் மேற்கொள்வதில் தாமதம் ஆனது.இதன் காரணமாக சில விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டன.
நகரில் வேறொரு இடத்தில் நடைபெறும் பணிகளின் போது விமான நிலைய கணினி கேபிள் துண்டிக்கப்பட்டதால் குழப்பம் நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
Comments