சம்பளம் பாக்கிக்காக கழிவு நீர் அகற்றும் லாரியை கடத்திச் சென்ற ஓட்டுநர்..!
சம்பளம் பாக்கிக்காக தான் ஏற்கனவே ஓட்டி வந்த கழிவுநீர் அகற்றும் லாரியை சென்னையிலுள்ள உரிமையாளரின் வீட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு கடத்திச் சென்றவரை போலீஸார் கைது செய்து லாரியை மீட்டனர்.
சென்னை மேடவாக்கத்தில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த கழிவுநீர் அகற்றும் லாரி காணாமல் போனதாக அதன் உரிமையாளர் வெங்கடேசன் அளித்த புகாரைத் தொடர்ந்து பள்ளிக்கரணை குற்றப்பிரிவு போலீஸார் சுமார் 250 சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் சுமங்கலி கூட் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை மீட்டதோடு லாரியை கடத்தியதாக மேடவாக்கத்தைச் சேர்ந்த ஏழுமலையை கைது செய்து செய்தனர்.
Comments