அமராவதியில் தலைநகருக்கான கட்டமைப்புகளை 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..!

ஆந்திர மாநிலம், அமராவதியில் தலைநகருக்கான கட்டமைப்புகளை 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்க வேண்டுமென்று மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
முந்தைய ஆட்சியின்போது அமராவதியில் தலைநகரை ஏற்படுத்த நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், புதிய அரசின் 3 தலைநகர முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி கட்டுமானங்களை முடிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து மாநில அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின் போது, உயர்நீதிமன்றம் நகர திட்டப் பொறியாளராக செயல்பட முடியாது என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், மனுதாரர்களான விவசாயிகள் மற்றும் மத்திய அரசு ஆகியோர் டிசம்பர் மாதத்துக்குள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
Comments