ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததற்காக கணவன் கண்டித்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை..!
தென்காசி மாவட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததற்காக கணவன் கண்டித்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியை சேர்ந்த அஜய்குமார் என்பவர் மனைவி பந்தா மஜ்கியுடன் கரிவலம்வந்தநல்லூர் அருகே வேலாயுதபுரத்தில் தங்கியிருந்து ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலைபார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான பந்தனா மஜ்கி அதில் 70 ஆயிரம் ரூபாய் வரை பறிகொடுத்ததாக கூறப்படுகிறது.
Comments