கல்லூரி முன்பு ரகளையில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது..!

0 1323

மதுரையில் கல்லூரி முன்பு ரகளையில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 4ஆம் தேதி மீனாட்சி அரசு கலைக்கல்லூரி முன்பு இளைஞர்கள் சிலர் மதுபோதையில் ஆபாசமாக கூச்சலிட்ட நிலையில், அங்கிருந்த மாணவி ஒருவரின் தந்தை அவர்களை தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் மாணவியின் தந்தை மீது தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, கல்லூரி வளாகத்தில் சென்று ரகளையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் 6 பேரை கைது செய்த நிலையில், மாணவியின் தந்தையைத் தாக்கிய திருநாவுக்கரசு என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments