இங்கிலாந்தில் இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தபடி செல்லும் கிறிஸ்துமஸ் ரயில்

0 1415

இங்கிலாந்தில் இரவு நேரங்களில் ‘கிறிஸ்துமஸ் ரயில்’ வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தபடி தண்டவாளங்களில் ஊர்ந்து செல்லும் காட்சியானது பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

அந்நாட்டில் உள்ள டார்ட்மவுத் நீராவி ரயில்வே நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ரயிலானது, வண்ண வண்ண ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் இந்த கிறிஸ்துமஸ் ரயில், இரவு நேரங்களில் ஒளிர்ந்தபடி தண்டவாளங்களில் ஊர்ந்து செல்லும். 

அதன்படி நேற்று முதல் இந்த கிறிஸ்துமஸ் ரயில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. தொடர்ந்து 5 வாரங்களுக்கு இந்த ரயில் சேவை பொதுமக்களுக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments