ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா - ஆளுநரின் கடிதத்திற்கு தமிழ்நாடு அரசு விளக்கம்

ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான தமிழக அரசின் மசோதா மீது விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதியிருந்த நிலையில், சட்டத்துறை மூலமாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 19ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவின் காலம் நாளை மறுதினம் முடிவடையவுள்ள நிலையில், தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? என்பன உள்ளிட்டவை குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக ஆளுநருக்கு, சட்டத்துறை உரிய விளக்கத்தை அனுப்பி வைத்துள்ளது.
Comments