ஓடும் பேருந்தில் பிக்பாக்கெட் அடித்தவனை மடக்கி பிடித்த கர்ப்பிணி போலீஸ்

சென்னை பேசின் பாலத்தில் ஓடும் பேருந்தில் செல்போனை திருடிக் கொண்டு தப்பிய கொள்ளையனை, 3 மாத கர்ப்பிணியான பெண் காவலர் துரத்திச் சென்று பிடித்தார்.
மாநகர பேருந்து ஒன்று பேசின் பாலம் காவல் நிலையம் அருகே வந்த போது பயணி ஒருவர் திருடன், திருடன் என கூச்சலிட்டதால், அதில் பயணித்த பெண் காவலர் சுசீலா பேருந்தை நிறுத்தி சந்தேக நபர்களை விசாரித்தார்.
விசாரிக்கத் தொடங்கியதும் இருவர் பஸ்ஸிலிருந்து குதித்து தப்பித்து ஓட, அவர்களில் ஒருவனை காவலர் சுசீலா விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து செல்போனை பறிமுதல் செய்தார்.
கொள்ளையனை பிடித்த சுசீலா 3 மாத கர்ப்பிணியாக இருந்தாலும் துணிச்சலுடன் நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடதக்கது
Comments