ஆஸ்திரேலியாவில், 24 வயது இளம்பெண் கொலை வழக்கில் இந்திய செவிலியர் டெல்லியில் கைது..!

இளம்பெண் கொலை வழக்கில், ஆஸ்திரேலிய போலீசாரால் ஐந்தரை கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த இந்தியர் , டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018-ம் ஆண்டு, குவின்ஸ்லாந்தில், 24 வயது இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, கடற்கரை அருகே புதைக்கப்பட்டிருந்தார்.
ஆஸ்திரேலிய போலீசாரால் தேடப்பட்டுவந்த இந்திய செவிலியர் ராஜ்விந்தர் சிங், கொலை நடந்த 3-வது நாளே, மனைவி, குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு, இந்தியாவிற்கு தப்பி வந்ததாக கூறப்படுகிறது.
ராஜ்விந்தர் சிங் குறித்த தகவல் அளிப்போருக்கு, இதுவரை இல்லாத அளவிற்கு, ஐந்தரை கோடி ரூபாய் சன்மானமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விரைவில் அவர், ஆஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார்.
Comments