போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம்

போக்குவரத்து விதிமுறைகளை மீறி கார் கண்ணாடியில், கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியதாக நடிகர் விஜய்-க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பனையூரில், கடந்த 20ந் தேதி நடைபெற்ற தனது மக்கள் இயக்க நிர்வாகிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய், தனக்கு சொந்தமான கருப்பு நிற இன்னோவா காரில் சென்றிருந்தார். அந்த காரின் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிருப்பதாக, வீடியோ ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி சமூக வலைதளத்தில் பொதுமக்களில் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இதனை அடுத்து, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, நடிகர் விஜய்-க்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக போக்குவரத்து போலீசார் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
Comments