கொரோனா பரவல் அதிகரிப்பு - பெய்ஜிங்கில் பள்ளிகள் மூடல்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, சீன தலைநகர் பெய்ஜிங்கில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
சீனாவில் புதிதாக 29 ஆயிரத்து 157 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் நோய்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பெய்ஜிங்கில் பள்ளிகள் மற்றும் கடைகள் மூடப்பட்டதோடு, உணவகங்களில் அமர்ந்து உணவருந்தும் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, ஷாங்காய் நகரிலும் பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Comments