கரடு முரடான சாலையில் 9 நபர்களை ஏற்றி சென்ற ஜீப் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!

0 8655

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கரடு முரடான சாலையில் நேற்று 9 நபர்களுடன் சென்ற சென்ற ஜீப்,  200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அசன் கொடை உட்கடை கிராமத்தை சேர்ந்த மக்கள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை சந்தையில் விற்று விட்டு  நள்ளிரவில் வீடு திரும்பும் போது, வாகனத்தின் முன்பக்க டயரை இணைக்கும் இரும்பு கம்பி முறிந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இவ்விபத்தில் அபிராமன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 8 பேரும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments