அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவனின் முகம் சிதைந்தது..!
திருவாரூர் மாவட்டம், அலிவலம் ஊராட்சியில் அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆனந்த் என்ற ஏழாம் வகுப்பு மாணவன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீரக்குமார் என்ற விவசாய கூலித்தொழிலாளி வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது இன்று காலை மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
கோவில்பத்து கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தொகுப்பு வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.
ஏற்கனவே பலமுறை ஒரு சில வீடுகளின் சில பகுதிகள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இனிமேலும் யாரும் பாதிக்காமல் இருக்க புதிய வீடுகளை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments