கைலாசாவில் வேலைவாய்ப்பு என கூறி விளம்பரம்.. பக்தியுடன் இருப்பவர்களுக்கு சம்பளமும், பதவியும் உயருமாம்..!

0 6129

கைலாசாவில் வேலைவாய்ப்பு என்ற இணையதள விளம்பரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. பிரபல சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாகவும், அங்கே இருப்பது போன்ற வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கைலாசா நாட்டில் பிளம்பர் முதல் வெளிநாட்டு தூதர் வரையிலான பணிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் சமூகவலைத் தளத்தில் வெளியானது.

இதில், இந்திய கிளைகளைத் தொடர்ந்து வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவதோடு பக்தியுடன் இருப்பவர்களுக்கு சம்பளமும், பதவியும் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் குறித்த தகவல்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments