சிதம்பரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் அனைவரும் அலறி அடித்து ஓட்டம்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து மாயவரம் சென்ற பேருந்து, சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு நேற்றிரவு வந்தது. பேருந்தில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்தது.
தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து அருகில் இருந்த டீசல் டேங்கில் தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில், அதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments