மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்து.. மயங்கியதாக கூறி மருத்துவமனையில் நாடகமாடிய கணவன் கைது..!

0 2944

நாகர்கோவிலில், மனைவியை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு, ஆம்புலன்ஸில் உடலை மருத்துவமனைக்கு எடுத்துவந்து  நாடகமாடிய கணவனை, போலீசார் கைது செய்தனர்.

பரோட்டா மாஸ்டரான முகமது உசேன், தனது மனைவி ரெஜின்பானு காலை வெகுநேரமாகியும் கண்விழிக்காமல் மயங்கி உள்ளதாகக்கூறி, 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துவந்துள்ளார்.

அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முகமது உசேனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, இரவு குடும்பத்தகராறில் மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, காலை கண்விழிக்கவில்லை எனக்கூறி நாடகமாடியது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments