ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது: வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன்

0 4699
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, வடதமிழகம் மற்றும் புதுவை பகுதியில் நிலவுவதாகவும், இது தொடர்ந்து தமிழகம், கேரள பகுதிகளை கடந்து, அரபிக் கடல் பகுதிக்கு செல்லும் என்றும் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததாகவும், 6 இடங்களில் அதி கனமழையும், 16 இடங்களில் மிக கனமழையும், 108 இடங்களில் கனமழையும் பெய்து உள்ளதாகவும் பாலசந்திரன் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் கடந்த 24 மணி நேரத்தில் 44 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும், இது கடந்த 102 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச மழை என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments