அரசுப் பேருந்தின் மேற்கூரை, படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் அச்சமின்றி செல்லும் மாணவர்கள்

0 2506

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு பேருந்தின் மேற்கூரை மற்றும் படியில் தொங்கிக் கொண்டே பள்ளி மாணவர்கள் பயணிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

நேற்று மாலை 6 மணி அளவில் ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளூரில் இருந்து சீதாஞ்சேரி செல்லும் அரசு பேருந்தில் ஏராளமான மாணவர்கள் படியில் தொங்கியபடியே வீர சாகசம் செய்வது போல் சென்றனர்.

ஒரு சில மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையை பிடித்துக் கொண்டும், ஜன்னல் மீது கால் வைத்தபடியும் ஆபத்தான நிலையில் சிறிதும் அச்சமின்றி பயணம் செய்தனர்.

இந்நிலையில் அசம்பாவிதம் ஏற்படும் முன் காவல்துறையினரும் பள்ளி நிர்வாகமும் மாணவர்களின் இந்த விபரீத செயலை தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments