நடுக்கடலில் கைது செய்யப்பட்ட சிறுநீரகம் பாதித்த சிறுவனை விடுவிக்க பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை..!

0 2454

இலங்கை கடற்படையால் நடுக்கடலில் கைது செய்யப்பட்ட சிறுநீரகம் பாதித்த சிறுவனை விடுவிக்க பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

எல்லைத் தாண்டி மீன்பிடித்தாகக் கூறி மீனவர் அந்தோணி ராயப்பன், பள்ளி விடுமுறை நாளில் மீன்பிடிக்க சென்ற அவரது மகன் உட்பட 15 பேரை  இலங்கை கடற்படையினர் படகுடன் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

கைது நடவடிக்கையால், தங்களது வாழ்வாரத்தை இழந்ததாக கூறும் மீனவர் அந்தோணி ராயப்பனின் மனைவி, சிறுநீரகம் பாதிப்புக்குள்ளான தனது மகன் தினசரி மருந்து சாப்பிடும் சூழலில் இருப்பதாகவும், அவரை மீட்டுத் தரக்கோரியும் கோரிக்கை விடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments