''பருவ மழையை எதிர்கொள்ள தமிழகத்தில் 65,000 களப்பணியாளர்கள் தயார்'' - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்..!

பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 65 ஆயிரம் களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவுக்கல் பெரியாறு அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு அமைச்சர் தண்ணீரை திறந்து வைத்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், தங்களது பகுதிகளில் மழையால் ஏற்படும் இடையூறுகளை முன்னரே அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில் களப்பணியாளர்கள் தயார்ப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Comments