கஷாயத்தில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த காதலி கிரிஷ்மாவின் வீட்டிற்கு போலீசார் சீல்..!

கஷாயத்தில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த காதலி கிரிஷ்மாவின் வீட்டிற்கு போலீசார் சீல்..!
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவன் கொலை வழக்கில், சீல் வைக்கப்பட்ட காதலி கிரிஷ்மாவின் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள், தடயங்களை அழிக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்லூரி மாணவன் சாரோன் ராஜுக்கு, கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது உறுதியானதையடுத்து காதலி கிரிஷ்மா, அவரது தாய் மற்றும் மாமா கைது செய்யப்பட்டனர்.
சாரோன் ராஜை கொலை செய்ய பயன்படுத்திய விஷ பாட்டில்கள் கிரீஷ்மாவின் வீட்டின் பின்புறத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதால், வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிலையில், கிரிஷ்மாவை காவலில் எடுத்து அவரது வீட்டிற்கு அழைத்து வந்து தடயங்களை திரட்ட போலீசார் திட்டமிட்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து தடயங்களை அளிக்க முயன்றுள்ளனர்.
Comments