தொழுகைக்கு சென்று திரும்பும் வழியில் சிறுவனை சூழ்ந்துக் கொண்டு நாய்கள் விரட்டிய சிசிடிவி காட்சிகள்..!

0 3076

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சிறுவனை 7 நாய்கள் சூழ்ந்து கொண்டு விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பள்ளப்பட்டி அடுத்த லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஓயேஸ் நேற்று காலை 8.45 மணியளவில் தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் நாய்கள் சூழ்ந்த நிலையில் அப்பகுதியில் இருந்த மக்கள் சிறுவனை மீட்டுள்ளனர்.

அப்பகுதியில், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் வந்த கூறி நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுவனை நாய்கள் விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பகிரப்பட்டு வரும் நிலையில் சிறுவன் பேசிய ஆடியோவும் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments