சாட் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் 50 பேர் உயிரிழப்பு - சுமார் 300 பேர் காயமடைந்ததாக தகவல்..!

சாட் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் 50 பேர் உயிரிழப்பு - சுமார் 300 பேர் காயமடைந்ததாக தகவல்..!
மத்திய ஆப்ரிக்க நாடான சாட் குடியரசில், ஜனநாயக ஆட்சியை அமல்படுத்தக்கோரி நடைபெற்ற போராட்டம், வன்முறையில் முடிந்ததில், சுமார் 50 பேர் உயிரிழந்ததாகவும், 300 பேர் காயமடைந்ததாகவும், அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
சாட் குடியரசு அதிபர் மஹமத் இட்ரிஸ் டெபி, கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி, தனது பதவிக்காலத்தை, மேலும் 2 வருடங்களுக்கு நீட்டித்தார்.
இதனையடுத்து எதிர்க்கட்சிகள் அதிபருக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், பாதுகாப்புப்படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
Comments