'ரியல் எஸ்டேட்' தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் 60 வயது நபர் தூக்கிட்டு தற்கொலை..!

0 3519

திருச்சி மாவட்டம் குணசீலம் அருகே நீர்தேக்கத் தொட்டியின் இரும்பு ஏணியில் தூக்கிட்டு தற்கொலை செய்த 60 வயது நபரின் உடலை, போலீசார் மீட்டனர்.

சட்டை பையிலிருந்த ஆதார் நகலின் அடிப்படையில், அவர் சென்னை தாம்பரத்தை சேர்ந்த பத்மநாபன் என்பது தெரியவந்தது.

லேப் டெக்னீசியனாக பணியாற்றி ஓய்வு பெற்ற பத்மநாபன், அதிக லாபம் கிடைக்கும் என ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் கூறியதை நம்பி, லட்சக்கணக்கில் கடன் வாங்கி, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து நஷ்டமடைந்ததும், கடன் தொல்லையால் கடும் மனஉளைச்சலில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments