கஞ்சா போதையில் பேருந்து ஓட்டுநர்- நடத்துநரை தாக்கி ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது..!

0 2600

அரியலூரில், கஞ்சா போதையில் கழுத்து, கைகளில் பிளேடால் கிழித்துக்கொண்டு, ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளிகளாக பணியாற்றி வந்த அசோக், சதீஷ், பழனி ஆகியோர் கஞ்சா போதையில், திருச்சி செல்லும் அரசு பேருந்தில் ஏறி, ரகளையில் ஈடுபட்டதுடன், ஓட்டுநர் - நடத்துநரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

போலீசார் பிடிக்க முற்பட்டபோது, அவர்கள் பிளேடால் கழுத்து - கைகளில் தங்களைத் தாங்களே கீறிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

மூவரையும் போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, அங்கும் ரகளையில் ஈடுபட்டு கதவு கண்ணாடியை தலையால் மோதி உடைத்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments