4வது வந்தே பாரத் ரயிலைத் இன்று இமாச்சலில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி இன்று இமாச்சலப் பிரதேசத்தில் புதிய வந்தே பாரதம் ரயிலைத் தொடங்கி வைக்கிறார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தில் இன்று நான்காவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
அம்ப் அந்தவுரா ரயில் நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. 5 மணி 20 நிமிடங்களில் 412 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் சென்றடையும்.
இதுதவிர பல்வேறு நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சம்பாவில் இரண்டு நீர் மின் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டி, பிரதமரின் கிராம சடக் யோஜனா திட்டத்தை மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
ஹரோலியில் 1,900 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் மருந்துப் பூங்காவுக்கான பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவதுடன், புதிய ஐஐடியையும் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
Comments