“ பாஜக தொண்டர்களே பாஜகவின் தோல்வியை எதிர்பார்க்கிறார்கள் ” - அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் மாநிலத்தில் உள்ள பல பாஜக தொண்டர்கள் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருப்பதாகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சியின் தோல்வியினை அவர்களே எதிர்பார்ப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வல்சாத் மாவட்டத்தில் பேரணியில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
குஜராத்தின் பல பகுதிகளில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்து மதத்திற்கு எதிரானவர் என பதாகைகள் வைக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Comments