சாப்பிட்ட பானி பூரிக்கு பணம் கேட்டதால் வியாபாரியை கல்லால் அடித்துக்கொன்ற இளைஞர்...!

0 2659

சென்னையில் பானி பூரி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட வடமாநில வியாபாரியை, கல்லால் அடித்துக் கொலை செய்த இளைஞரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவல்லிக்கேணி ரோட்டரி நகரில், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அமர்சிங் என்பவர், பானி பூரி விற்பனை செய்து வந்தார். கடந்த 4ம் தேதி அவரிடம் பானி பூரி வாங்கி சாப்பிட்ட விக்னேஷ் என்பவன், பணம் கொடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

பணத்தை அமர்சிங் கேட்டதால் ஆத்திரமடைந்த விக்னேஷ், கீழே கிடந்த கல்லை எடுத்து தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்த அமர்சிங், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராயப்பேட்டை போலீசார் விக்னேஷை கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments