வீட்டின் பூட்டை உடைத்து ரூ.34 லட்சம் நகை-பணம் கொள்ளை..!

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
உறையூர் ராமலிங்க நகரைச் சேர்ந்த கனிமொழி மற்றும் அவரது குழந்தைகள் பள்ளி விடுமுறையை ஒட்டி கடந்த 1ந்தேதி வீட்டை பூட்டிக் கொண்டு சீர்காழியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
வெளியூர் சென்றுவிட்டு நேற்று மாலை வீட்டிற்கு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அலமாரியில் இருந்த 90 சவரன் நகை மற்றும் 70ஆயிரம் ரூபாய் பணம் திருட்டுப் போயிருப்பதை அறிந்து போலீசில்புகார் அளித்துள்ளார்.
Comments