லிஃப்ட் கேட்டு வந்த பாலிடெக்னிக் மாணவரை கடத்தி 30000 ரூபாய் கேட்டு மிரட்டியவர்கள் கைது

0 3128

லிஃப்ட் கேட்டு வந்த முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவரை கடத்தி, 30 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போரூரை சேர்ந்த சுசீலா, தனது மகன் சபரியை கடத்தி வைத்துக்கொண்டு செல்போனில் பணம் கேட்டு மிரட்டல் வந்ததாக போலீசாரிடம் புகாரளித்தார். இதனையடுத்து சபரியின் செல்போன் சிக்னலை வைத்து தீவிரமாக தேடிய போலீசார் காரம்பாக்கம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சபரியை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட பாலாஜி, விஜய் ஆகியோர், சபரி லிஃப்ட் கேட்டு வந்தபோது கடத்தி வைத்துக்கொண்டு, தங்களது காரை இடித்துவிட்டதாக பணம் கேட்டதாக போலீசாரிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கபட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments