அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் டிரைவர் இல்லா ரோபோ-டாக்சிகள் அறிமுகம்..!

0 2775

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகர்ப்புற தெருக்களில், பொதுமக்கள் இரவில் பணம் செலுத்தி பயணம் செய்ய முற்றிலும் டிரைவர் இல்லாத ரோபோ-டாக்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ரோபோ-டாக்சிகள், கணினியின் கட்டளை படி இயங்கி வருகின்றன.

பயணிகள் பயமின்றி, பாதுகாப்பாகச் செல்லலாம் எனவும், இந்த டாக்சிகள், போக்குவரத்தில் புதுபுரட்சியை ஏற்படுத்தும் எனவும் இதனை அறிமுகப்படுத்தியுள்ள குரூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் பயணித்த பயணிகள் பயமாகவும், அதே சமயம் ஆச்சரியம் ஊட்டும் விதமாகவும் புது அனுபவத்தைத் தந்ததாகக் கூறியுள்ளனர். ஆனால் முழுவதும் தன்னிச்சையாக, டாக்சிகளை நகர்ப்புற தெருக்களில் அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது என்றும் பலர் விமர்சித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments