பாக். ஆதரவு தீவிரவாதத் தலைவர்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு..!

0 3853
பாக். ஆதரவு தீவிரவாதத் தலைவர்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு..!

பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாயிதீன் உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்த 10 தலைவர்களை சர்வதேச தீவிரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தேசவிரோத தடுப்பு நடவடிக்கையின் கீழ் பத்து தலைவர்களை தீவிரவாதிகளாக அறிவித்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

சவுக்கத் மோச்சி உள்ளிட்ட இந்த பத்து தீவிரவாதிகளில் சிலர் பாரமுல்லா உள்ளிட்ட காஷ்மீர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். தற்போது பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்று விட்டனர்.

இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது, இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத செயல்களுக்குத் தூண்டுவது உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments