நித்யானந்தா என நினைத்து தன் ஆசிரமத்தை இடித்து விட்டார்கள் - பாஸ்கரானந்தா சாமியார் பரபரப்பு புகார்..!
நித்யானந்தா என நினைத்து தன் ஆசிரமத்தை இடித்து விட்டார்கள் - பாஸ்கரானந்தா சாமியார் பரபரப்பு புகார்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நித்யானந்தா என நினைத்து தன் ஆசிரமத்தை சேதப்படுத்தியதாக பாஸ்கரானந்தா என்ற சாமியார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோவை செல்வபுரத்தைப் சேர்ந்த பாஸ்கரானந்தா என்ற சாமியார் கரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைப்பது தொடர்பான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த ஆசிரம கட்டுமான பணிகள் முழுவதுமாக இடிக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு வந்த பாஸ்கரானந்தா சாமியார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Comments