சினிமா விமர்சகர் புளூசட்டை மாறனுக்கு தீவைத்த சிம்பு ரசிகர்கள்..!

0 4998

வெந்து தனிந்தது காடு படம் குறித்த விமர்சனத்தில்  உருவகேலி செய்த புளூ சட்டை மாறனின் புகைப்படத்துக்கு தீவைக்கும் போராட்டத்தை சிம்பு ரசிகர்கள் முன்னெடுத்துள்ளனர்.

ரஜினி கமல், அஜீத் விஜய், தனுஷ் சிம்பு....முன்னனி நடிகர்... பின்னணி நடிகர் என்று பாரபட்சமில்லாமல் அனைவரது படத்தையும் விமர்சனம் என்ற பெயரில் விளாசி எடுப்பது புளூசட்டை மாறனின் பாலிசி..!

அந்தவகையில் அஜீத்தின் வலிமை படத்தில் அஜீத்தை உருவகேலி செய்து சர்ச்சையில் சிக்கிய மாறன் வெந்து தனிந்தது காடு படத்தின் விமர்சனத்தில் அந்த படத்தில் தோன்றிய பெரும்பாலான நட்சத்திரங்களை உருவகேலி செய்ததாக சர்ச்சை எழுந்தது..

இந்த நிலையில் புளூ சட்டை மாறனுக்கு எதிராக சிம்பு ரசிகர்கள் தீவைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில் புதுச்சேரியை சேர்ந்த 5 சிம்பு ரசிகர்கள் சேர்ந்து புளூசட்டை மாறனின் படத்திற்கு செருப்பு மாலை போட்டு, தீவைத்தனர்

கடந்த காலங்களில் புலி, விவேகம், அண்ணாத்த, வலிமை , வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட படங்கள் புளூசட்டை மாறனின் கடுமையான கேலி, கிண்டல்களுக்கு உள்ளான போது இணையத்தில் கண்டனம் தெரிவித்து வந்த ரசிகர்கள் தற்போது வீதிக்கு வந்துள்ளனர்.

இது போன்ற களே பாரங்களை தடுக்கும் விதமாக திரைப்பட விமர்சனத்தை 3 நாட்கள் கழித்து வெளியிடுமாறு தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments