குஜராத் வந்த கெஜ்ரிவாலுக்கு மோடி பெயரில் வரவேற்ற கட்சித் தொண்டர்கள்.. திகைப்படைந்த அரவிந்த் கெஜ்ரிவால்..

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.
குஜராத்தின் வதோதரா சென்ற அவரை விமான நிலையத்தில் வரவேற்ற கட்சித் தொண்டர்கள் ”மோடி மோடி” எனக்கூறி கோஷமிட்டதால் ஆம் ஆத்மி கட்சியினர் திகைப்படைந்தனர்.
பின்னர் கெஜ்ரிவால் பெயரைக் கூறி வரவேற்பளித்தனர். தேர்தல் வாக்குறுதியாக ”300யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை, தரமான மருத்துவம், கல்வி வழங்கப்படும்” என கெஜ்ரிவால் உத்திரவாதம் அளித்துள்ளார்
Comments