மாணவிகளின் குளியல் வீடியோ வெளியானதாக கூறப்படும் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவி, ஆண் நண்பர் உள்ளிட்ட 2 பேர் கைது

0 3814
மாணவிகளின் குளியல் வீடியோ வெளியானதாக கூறப்படும் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவி, ஆண் நண்பர் உள்ளிட்ட 2 பேர் கைது

சண்டீகர் பல்கலைக்கழக மாணவிகளின் குளியல் வீடியோ ஆன்லைனில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவி,மற்றும் அவருடைய ஆண் நண்பர் உள்ளிட்ட 2 இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைவதை தடுக்கும் பொருட்டு, 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அருகிலுள்ள பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான மாணவ- மாணவிகள் ஊருக்கு திரும்பி விட்டனர்.

இதனால் போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் பலரும் வீடியோ ரெகார்டிங் அச்சத்தால் கழிவறையை பயன்படுத்தவே அஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments