சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதிய இருசக்கர வாகனம்.!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கழக்கூட்டம் பகுதியைச் சேர்ந்த உஷா குமாரி என்ற பெண் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயமடைந்த உஷா குமாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருசக்கர வாகன ஓட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments