லக்னோவில் மழையால் ராணுவ வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 9 தொழிலாளர்கள் பலி..!

லக்னோவில் மழையால் ராணுவ வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 9 தொழிலாளர்கள் பலி..!
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் பெய்த கனமழையால் தில்குஷா பகுதியில் உள்ள ராணுவ வளாகத்தின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் சுற்றுசுவரையொட்டி குடிசைகள் அமைத்து தங்கி இருந்த 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்தில் பலியானவர்களுக்கு 4 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாயும் நிவாரணத் தொகையாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
லக்னோவில் ஒரு மாத மழை ஒரே நாளில் பெய்துள்ளதாக கூறப்படும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நகரில் 155.2 மி.மீ பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Comments