சாமி… என் சாமி.. புஷ்பா பாடலுக்கு நடனம் ஆடிய "குட்டி ராஷ்மிகா" - குழந்தையை பார்க்க வேண்டும் என நடிகை ட்விட்டர் பதிவு

0 5472

நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா ஆகியோர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் வரும் சாமி சாமி பாடலுக்கு பள்ளி குழந்தைகள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் வரும் சாமி சாமி பாடலும், அதற்கு ராஷ்மிகாவின் நடனமும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

தற்போது அந்த பாடலுக்கு பள்ளி குழந்தைகள் ஒன்றாக நடனமாடியுள்ளனர். அதில் ஒரு குழந்தை மட்டும் பாடலை ரசித்து ராஷ்மிகா போலவே நடனமாடி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ராஷ்மிகா, இந்த குழந்தையை தான் சந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments