அரியானாவின் இருவேறு இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற 7 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0 1897

அரியானாவில் விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற 7 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மகேந்திரகார் மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை நேற்றிரவு 20 பேர் கால்வாயில் கரைக்க சென்றனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்றதால் சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கினர்.

தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் 4 பேரை உயிருடன் மீட்ட நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதே போல், சோனிபட் மாவட்டத்தில் கங்கா ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவங்களில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் இரங்கல் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments