கொடைக்கானலில் பெய்த தொடர் கனமழையால் நிரம்பிய நீர்த்தேக்கம்.!

0 2013

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த தொடர் கனமழையால் 5 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள மனோரத்தினம் சோலை நீர்த்தேக்கம் நிரம்பியுள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்ததால், நீரோடைகள், அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் மனோரத்தினம் சோலை நீர்த்தேக்கம் 5 வருடங்களுக்கு பிறகு முழு கொள்ளவான 36 அடியை எட்டியது.

அப்பகுதியில் உள்ள மண் அணையிலும் நீர் மட்டமும் உயர்ந்ததால், 2 ஆண்டுகளுக்கு கொடைக்கானலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments