இறந்த தாயை சக்கர நாற்காலியிலேயே வைத்து சுடுகாட்டிற்கு கொண்டு சென்ற மகன்.!

0 2894

இறந்த தாயை சக்கர நாற்காலியிலேயே வைத்து சுடுகாட்டிற்கு மகன் கொண்டு சென்ற நிகழ்வு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்றுள்ளது.

பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த 74 வயதான ராஜேஸ்வரி என்பவர் தனது, கணவன் மற்றும் மகன் முருகானந்தத்துடன் வசித்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக உடல் நலம் பாதித்த நிலையில் இருந்த மூதாட்டியை அவரது மகன் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அதிகாலை மூதாட்டி உயிரிழந்த நிலையில், அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் என யாரிடமும் ஏதும் சொல்லாமல் அவரது உடலை வீல் சேரில் அமர வைத்து கட்டி சுடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

உடல் நலம் பாதித்த முருகானந்தத்தின் தந்தை இது பற்றி கேட்காதததாக கூறப்படும் நிலையில், 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு சர்க்கர நாற்காலியில் வைத்து நகராட்சி தகன மேடை அமைந்த இடத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

வறுமை மற்றும் அறியாமையால் அவ்வாறு செய்ததாக முருகானந்தம் கூறிய நிலையில், தகன மேடை பணியாளர் இறுதி சடங்குகள் செய்து உடலுக்கு தகனம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments