ஸ்ரீமதியின் இன்சியல் மாறியதா.? யூடியூப்பரிடம் ஆதாரம் கேட்டு தாய் செல்வி ஆவேசம்...! டிஜிபியிடம் பரபரப்பு புகார்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தற்கொலைக்கு காரணம் அவரது தாயார் என்றும், செல்வியின் பின்னனி குறித்தும் வீடியோ பதிவிட்ட யூடியூபர் மீது நடிவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், தங்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களின் அடிப்படையில் மாணவியின் தாய் செல்வி அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
The K tv எனும் பெயரில் யூ ட்யூப் சேனல் நடத்தி வரும் கார்த்திக் பிள்ளை என்பவர், தனது யூ-ட்யூப் சேனலில் தனது மகள் குறித்தும், தன்னை பற்றியும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதாக குற்றஞ்சாடிய ஸ்ரீமதியின் தாயார் செல்வி , தனது கணவருடன் டி.ஜி.பி அலுவலகம் வந்து புகார் தெரிவித்தார்.
தனது மகள் ஸ்ரீமதிக்கு 9ஆவது படிக்கும் வரை G என்று இன்சியல் இருந்ததாகவும், ராமலிங்கத்தை தான் பின்னர் திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த யூடியூப் வீடியோவில் தெரிவிக்கப்படுள்ளதாக கூறிய ஸ்ரீமதியின் தாய் செல்வி, கணேசன் என்பவரை ஸ்ரீமதியின் தந்தை எனக் கூறி, அவரை நான் கொலை செய்திருக்கலாம் என அந்த வீடியோவில் அவதூறாக தெரிவித்துள்ளார் என்றார்...
தன்னை பற்றியும், தனது மகள் குறித்தும் பேசியதற்கு அந்த யூ ட்டியூபர் ஆதாரத்தை காட்ட வேண்டும் என ஆவேசமடைந்த அவர் ஸ்ரீமதியின் பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ், தங்களின் பத்திரிக்கை, திருமண போட்டோ ஆகியவற்றை காண்பித்தார்.
தனது மகள் ஸ்ரீமதி மரணம் தொடர்பாக சிபிசிஐடி முதல் நாள் விசாரித்தனர். அதன் பிறகு தன்னிடம் விசாரிக்கவில்லை என தெரிவித்த மாணவியின் தாயார் செல்வி, மாணவி மரணம் நடந்த பள்ளியில் உள்ள கைரேகை ஏற்கனவே இருந்த வண்ணப் பூச்சு எனக் கூறுகிறார்கள், ஆனால் அது உண்மையல்ல, அந்த பள்ளிக்கு பல முறை சென்றுள்ளேன், அங்கு கைரேகை இதற்கு முன்பு இல்லை ஆணித்தரமாக சொல்வேன் என செல்வி தெரிவித்தார்.
யூடியூப்பில் செல்விக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட பலரும் நீதிமன்ற தீர்பை விமர்சித்து வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், ஸ்ரீமதியின் தாய் குறித்தும், அவருக்கு பின்னனியில் இருப்பவர்கள் யார்? யார்? என்பது குறித்தும், பள்ளிகூட கலவரத்தின் பின்னணியில் உள்ள 3 கும்பல்கள் குறித்தும் தொடர்ச்சியாக யூடியூப்பர் கார்த்திக் பிள்ளை என்பவர் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வரும் நிலையில் இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
Comments