வீட்டில் தனியாக இருந்த பெண்னை கழுத்தை நெரித்து கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்து சென்ற இளைஞர் கைது

0 2977

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கோனாப்பட்டு கிராமம்  புதுமனை ஆரோக்கியபுரத்தை சேர்ந்த வசந்தா என்ற பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த 17ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு சிவக்குமார் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் 6 மாதத்திற்கு முன்பு வசந்தா வீட்டிற்கு சிசிடிவி பொருத்த சென்றதும்,  அப்போது அவர் தனியாக வசிப்பதை தெரிந்து கொண்டதால் கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்து சென்றதும் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments