ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞரை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்.!

0 2397

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

வெள்ளைப் பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த மாணிக்கம் என்ற இளைஞர் வருவாய்த்துறையினரின் எச்சரிக்கையும் மீறி தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது நீரின் அதீத வேகத்தால் அடித்துச் செல்லப்பட்ட அவர், திருக்கோவிலூர் மேம்பாலம் அருகே உள்ள நடு கரையில் கரையேறி வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கயிறு மூலம் மாணிக்கத்தை வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments