குத்துச்சண்டை போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.. விளையாட்டுத்துறை அமைச்சர் அஞ்சலி!

0 2779

சென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின் போது காயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த வீரரின் குடும்பத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

கடந்த 21ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சீனியர் அளவிலான தேசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற வீரர் யோரா தடே மயங்கி விழுந்ததால், சென்னை அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தலையில் அடிபட்டு ரத்த கசிவு ஏற்பட்டது தெரியவந்ததால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 2 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த யோரா தடே இன்று உயிரிழந்தார். விளையாட்டு வீரரின் உடலுக்கு அமைச்சர் மெய்யநாதன் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments