அதிவேகமாக வந்த கார் கட்டுபாட்டை இழந்து சாலையோரமாக நின்று பேசிக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது மோதி விபத்து!

0 12890

ஈரோடு மாவட்டம் பவானி அருகே அதிவேகமாக வந்த கார், கட்டுபாட்டை இழந்து சாலையோரமாக நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் இருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

ஜம்பையில் உள்ள ஒரு டீக்கடை வாசலில் சக்திவேல் மற்றும் அவரது உறவினரான நந்தகோபால், இருசக்கர வாகனம் மீது அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஆப்பகூடலில் இருந்து பவானி நோக்கி அதிவேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததில், இவர்கள் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments